வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சி.வி. விக்கினேஸ்வரனை முதல்வராக தேர்ந்தெடுத்த பின்னர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா உத்தியோகபூர்வ கடிதத்தை அனுப்பிவைத்தார்.
கடிதத்தைப் பார்த்த வடக்கு மாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திசிறியின் முதகத்தில் கவலை படர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை நாட்களும் வடக்கின் முடிசூடா மன்னனாக இருந்த இடத்திற்கு மக்களால் மக்களால் முடி சூட்டப்பட்ட ராரஜா தெரிவாகி உள்ளதனால் அவரது முடி பறிபோகிறது என ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்கள் தமக்குள் உரையாடி உள்ளனர்..
வடக்கு மாகாண ஆளுநராக சந்திசிறி செயற்பட்ட காலத்தில் வடக்கில் வரும் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்துடன் அபிவிருத்தித் திட்டங்களையும் அரசுக்கும் தனக்குமான பிரசார அரசியல் நோக்கங்களுக்காக பாவித்தார். எல்லாவற்றையும் ஆண்டனுபவித்த நிலையில் தற்பொழுது பெரும்பாலான விடயங்கள் முதலமைச்சரின் கீழ் செல்லுகின்றன.
இனி தனது காலம் இல்லை என்றும் முதலமைச்சரின் காலம் தொடங்கிவிட்டது எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ள சந்திரசிறி கூடடமைப்பினர் தன்னை இந்தப் பதவியை விட்டு அகற்ற முடிவுசெய்தமை குறித்தும் பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
எப்படியிருந்த போதும் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாராஜா அனுப்பி வைத்த கடித்தின்படி சி.வி விக்கினேஸ்வரனை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளுவதாக பதில் கடித்தை வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி அனுப்பியுள்ளார்.
-GTN
















