சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவன் பற்றிய திடுக்கிடும் பின்னணி

sex-kidஇந்தியாவின் ராஜஸ்தானில் ரயில் நிலையத்தில் ஒரு சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 14 வருடங்களாக பொலிசாரால் தேடப்பட்ட கொலை குற்றவாளி என தெரியவந்துள்ளது.

தாப்லாவில் வசித்துவந்த ஒரு பெண்ணுடன் தவறான உறவு கொண்டிருந்த பாபுராம் என்னும் நபர், கடந்த செவ்வாய்கிழமை அப்பெண்ணை சந்திக்க முயன்றுள்ளார்.

பாபுராமை சந்திக்க அப்பெண் மறுத்துவிடவே, போதை மயக்கத்தில் இருந்த பாபுராம், தாப்லா ரயில் நிலையத்தில் இருந்த ஒரு 4 வயது சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாபுராமை கைது செய்த பொலிசாருக்கு பின்னர் தான் பாபுராம் 14 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் கொலை குற்றவாளி என்பது தெரியவந்தது.

1999 ஆம் ஆண்டு தனது சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாபுராம் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார்.

பாபுராமால் பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply