நவனீதம்பிள்ளை இலங்கை மீது கோபத்துடன் செயற்பட்டு வருகிறார் அல்ஜசீராவிடம் ஜனாதிபதி முறைப்பாடு

Mahinda-Rajapaksa2சிறிய நாடு என்ற காரணத்தினால் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிய நாடு என்பதற்காக இலங்கையை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் குற்றம் சுமத்தப்படும் அதேவேளை, மேற்குலக நாடுகளில் இடம்பெறும் பிரச்சினைகள் கவனத்திற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நவனீதம்பிள்ளை இலங்கை மீது கோபத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

நவனீதம்பிள்ளை இலங்கை விஜயம் செய்திருந்த போது சில ஆளும் கட்சி அமைச்சர்கள் வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ஜனநாயகம் என்பது யாரும் எதுவும் சொல்லக் கூடிய சூழ்நிலையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மை சந்தித்த போது குறிப்பிடாத குற்றச்சாட்டுக்களை வாய்மொழி மூல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்கள் தொடர்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விசாரகைளை நடாத்த முடியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினரை நாட்டின் எந்தவொரு இடத்திலும் நிலைநிறுத்தக் கூடிய அதிகாரம் அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply