உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆராயப்படும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

vik-samஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ஆராயப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாகாணசபைகளுக்கான காணி அதிகாரங்கள் தொடர்பில் அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கயிருந்தது.

காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு உரியது எனவும், மாகாண அராசங்கங்கள் தீர்மானிக்க முடியாது எனவும் அறிவித்திருந்தது.

அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து உன்னிப்பாக ஆராயப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் காணிப் பிரச்சினை ஓர் மிக முக்கியமான சர்ச்சையாக நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தில் காணி அதிகாரங்கள் குறித்து தெளிவாக விதந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கான காணி அதிகாரங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாரிய சர்ச்சையை நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குப் புறம்பாக அரசாங்கம் அண்மைய ஆண்டுகளில் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply