பெண்கள் பற்றிய பழமொழிகள்

kavya1. பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட்சியும் இல்லை.

2. பெண் கிளை , பெருங்கிளை .

3. பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

4. பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .

5. பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .

6. பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .

7. பெண் பாவம் பொல்லாதது .

8. பெண் வாழ , பிறந்தகம் மகிழ

9. பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.

10. காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் – ஷேக்ஸ்பியர்.

11. பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் – வேட்லி.

12. பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.

13. பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது – லார்ட் பைரன்.

14. பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை – ஷேக்ஸ்பியர்.

15. பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது – ஷேக்ஸ்பியர்.

16. பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை – லாண்டர்.

17. எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம்

18. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்

19. பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.

20. ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்.

Tags: ,

Leave a Reply