கோவிட்-19: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,867 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இதில் ஒருவர் புதுச்சேரியை சேர்ந்தவர். தலைநகர் சென்னையில் 4985 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 404 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். தற்போது 3,01,580 பேர் நோய் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19,421 ஆண்களும், 15,446 பெண்களும் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,026 பேர் இன்று சிகிச்சையிலிருந்து குணம் பெற்றுள்ளனர். சென்னைக்கு அடுத்ததாக 4,277 பேர் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!