வட மாகாணசபை முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் ; வரவேற்கிறார் வாசுதேவ நாணயக்கார

Vasudevaஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதை தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது பாராட்டப்பட வேண்டியதொன்று. வடக்கு அபிவிருத்திக்கு, மத்திய அரசாங்கத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள இது சிறந்த சந்தர்ப்பமாக அமையக் கூடும்.

அத்துடன் எட்டு மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் ஜனாதிபதியுடன் சுமூகமாக செயற்பட்டு வருகின்றனர். வட மாகாணசபை முதலமைச்சர் எவ்வாறு செயற்படுகின்றார் என்பது குறித்து எதிர்காலத்தில் அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply