சோடாப் போத்தலினுள் எறும்புகள் இருப்பதை அறியாது அதனை எடுத்த அருந்திய ஒன்றரை வயதுப் பெண் குழந்தை தொண்டை வீங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் கட்டுவன் வீதி, மல்லாகத்தைச் சோர்ந்த ரஜித் கபின்ஜா என்ற ஒன்றரை வயதுக் குழந்தையே கடி எறும்பினால் கடியுண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
வீட்டில் உள்ளவர்கள் சோடா வாங்கிக் குடித்துவிட்டு எஞ்சிய சோடாவை போத்தலுடன் அப்படியே வைத்து விட்டனர். இதன் போது எறும்புகள் சோடாப் போத்தலினுள் நுழைந்து விட்டன. இதனை அறியாத பெண் குழந்தை எறும்புகள் உள்ள சோடாவை எடுத்துக் குடித்துள்ளது.
எறும்புகள் குழந்தையின் தொண்டைப் பகுதியில் கடித்ததால் அது வீறிட்டு அழத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குழந்தையை அவதானித்த பெற்றோர் உடனடியாக தெல்லிப்பழை ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டுசென்றனர்.
பின்னா அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலைக்கு குறித்த பெண் குழந்தை சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
















