இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக மாணவர்கள் பொலிஸாரால் கைது

tamilstudentsசிங்கள கிரிகெட் வீரர்களை இந்தியாவில் முழுமையாகத் தடை செய்யக்கோரி சென்னையில் தமிழக மாணவ அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் கூடிய மாணவர்கள் பல்வேறு கோ­ங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது சிங்கள வீரர்கள் சம்பியன்ஸ் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதி, இலங்கையுடன் ஒருநாள் தொடர், டெஸ்ட் மற்றும் 20/20 போட்டிகளை நடத்தாதே, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இனப்படுகொலை நாடான இலங்கையுடனான எல்லா விளையாட்டு போட்டிகளையும் புறக்கணி போன்ற கருத்துக்களை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இதன்போது அங்கு கூடிய பொலிஸார் மாணவர்களை கடுமையாகத் தாக்கி கைது செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக பொலிஸார் நடவடிக்கை மேற் கொண்டு வருவதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: ,

Leave a Reply