கோவிட் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் தனது முயற்சியைக் கைவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கையில் மூன்றாவது அலைக்குப் பின்னர் மோசமாகியுள்ள கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் தனது முயற்சியைக் கைவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்றாவது அலையின் ஆரம்பத்திலிருந்து கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் பலவீனமானவையாக இருந்தன.

அரசாங்கம் கோவிட் கட்டுப்பாட்டில் தனது முயற்சியை கைவிட்டுவிட்டது. எனினும் ஏனைய மற்ற விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், அகில இலங்கை விவசாயக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் சமந்த வித்யாரத்ன போன்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பிலும் அனுரகுமார கருத்துரைத்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை அடக்க முடியாது என்று கூறிய திசாநாயக்க, விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதே ஒரே மாற்று என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!