6 வயது சிறுமியை வன்கொடுமை செய்ததோடு தூக்கில் தொங்கவிட்டு சாகும்வரை வேடிக்கை பார்த்த கொடூரன்!

கேரளாவில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிட்ட போது, துடிதுடித்து இறந்ததை நேரில் பார்த்ததாக குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (22), தோட்ட தொழிலாளியான இவர், கடந்த மாதம் 30ம் தேதி 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியது: அர்ஜூனுக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டு. ஆகவே செல்போனில் ஏராளமான ஆபாச படங்களை டவுன்லோட் செய்து வைத்து உள்ளார்.

அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் தோட்ட தொழிலாளி வேலைக்கு சென்ற பிறகு அவர்களது வீட்டுக்கு சென்று அவர்களது 6 வயது குழந்தைக்கு மிட்டாய், பலகாரம் வாங்கி கொடுத்து வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இதையே தொடர்ந்து செய்துள்ளார், சம்பவ தினத்தன்று சிறுமி மயங்கி விழவே, சிறுமியை தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.

அப்போது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய போதும், அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளார்.

பின்னர் சிறுமி இறந்ததை உறுதி செய்த பிறகு கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக தப்பி சென்று இருக்கிறார்.

அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல் சிறுமியின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கேற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அர்ஜூனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!