பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவது குறித்து கவனிக்கப்பட வேண்டும் – UK

uk-flagபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவது குறித்து கவனிக்கப்பட வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. அண்மையில் பொதுநலவாய நாடுகள் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற, பிரித்தானிய பொதுநலவாய அமைச்சர் ஹிகோ சய்வர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உறுப்பு நாடுகள் பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அமர்வுகளை நடாத்துவதில் பல்வேறு சவால்கள் காணப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உறுப்பு நாடுகள் பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரினதும் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply