இலங்கை பௌத்தர்கள் வன்முறைகளை தவிர்க்க வேண்டுமென தலய்லாமா கோரிக்கை

dalai_lamaஇலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்தர்கள் வன்முறைகளை தவிர்க்க வேண்டுமென திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலய்லாமா கோரிக்கை விடுத்துள்ளார். மதம் பற்றிய நம்பிக்கை மிகவும் நல்ல விடயம் என்ற போதிலும் ஏனைய மதங்களையும் மதிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மதங்களை மதிப்பதன் மூலம் மதங்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இலங்கையிலும் பர்மாவிலும் முரண்பாடுகள் ஏற்பட்டதாக தமக்கு தகவல் கிட்டியதாகத் தெரிவித்துள்ளார். பர்மாவின் பௌத்த பிக்குகள் பயங்கரவாதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply