நைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி

nigeria_studentநைஜீரியாவில் கல்லூரியொன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா நகரில் விவசாயக் கல்லூரியொன்று அமைந்துள்ளது.

அங்குள்ள விடுதியில் நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் கும்பலாக திடீரென்று புகுந்தனர்.

ஒவ்வொரு அறையாக சென்று சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய மாணவர்களையும் இறக்கமின்றி சுட்டு தள்ளினர்.

வகுப்பறைகளுக்கும் தீ வைத்தனர். இதில் 50 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இராணுவத்தினர் சென்று பலியான 26 மாணவர்களின் உடல்களை மீட்டனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. கல்லூரியில் படித்த சுமார் 1,000 மாணவர்கள் தப்பி ஓடி விட்டதாக கல்லூரி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு, தனி நாடு கேட்டு போராடி வருகிறது. இவர்கள் அப்பாவி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்த மாதத்தில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் 143 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் இராணுவ உடை அணிந்து தாக்குதலில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply