பருத்தித்துறையில் மேலும் 14 பேருக்கு தொற்று! – 6 பேர் தப்பியோட்டம்.

பருத்தித்துறை நகரில், மேலும் 7 வர்த்தகர்களுக்கு தொற்று உள்ளமை நேற்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பொலிஸார் ஊடாக அவர்களைக் கைது செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறிப்பட்டுள்ளது.

அதனையடுத்து தொற்றாளர்களை அடையாளம் கண்டு கொவிட்-19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் 6 பேரும் பிசிஆர் மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களிடம் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்ற போது அவர்களும் தலைமறைவாகியுள்ளதால் பொலிஸாரின் உதவியை சுகாதாரத் துறையினர் நாடியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!