ஸ்டூடியோவுக்குள் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் பாலியல் உறவு!

tv-programmeஸ்டூடியோவுக்குள் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் பாலியல் உறவுகொண்டபின் அந்த அனுபவம் குறித்து கலந்துரையாடும் பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: பிரபல ஊடகவியலாளர் தொகுத்தளிக்கிறார்.

தொலைக்­காட்சி ஸ்டூடி­யோ­வொன்றில் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு முன்னால் அமைக்­கப்­பட்­டுள்ள பெட்­டி­யொன்­றுக்குள் தம்­ப­தி­யினர் பாலியல் உற­வு­கொண்ட பின்னர், அந்த அனு­பவம் குறித்து அத்­தம்­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடும் நிகழ்ச்­சி­யொன்றை பிரிட்­டனின் சனல் 4 தொலைக்­காட்சி அலை­வ­ரிசை ஒளி­ப­ரப்­ப­வுள்­ளது. பிரிட்­டனின் பிர­பல தொலைக்­காட்சி அறி­விப்­பா­ளரும் நிகழ்ச்சித் தயா­ரிப்­பா­ள­ரு­மான மேரி­யெலா புரொஸ்ட்ரொப் இந்­நி­கழ்ச்­சியை தொகுத்­த­ளிக்­க­வுள்ளார்.

பிரித்­தா­னிய தொலைக்­காட்­சி­களின் எல்­லையை தான் விரி­வாக்­கு­வ­தாக அந்த அலை­வ­ரிசை கூறு­கி­றது. எனினும் இது மலி­வான பிர­சார உத்தி என்ற விமர்­ச­னங்­களும் எழுந்­துள்­ளன.

“செக்ஸ் பொக்ஸ்” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த நிகழ்ச்­சிக்­காக மேற்­படி “ பெட்­டிக்குள்” மூன்று தம்­ப­திகள் செல்­ல­வுள்­ளனர். இதில் ஒன்று ஒரு­பா­லின ஜோடி­யாகும். இவர்கள் அப்­பெட்­டிக்குள் சுமார் 35 நிமி­ட­நேரம் பாலியல் உற­வு­கொண்ட பின்னர் வெளியில் வந்து, உள­வியல் மருத்­துவர் பிலிப் ஹட்சன், பாலியல் மருத்­துவர் ட்ரேஸி கொக்ஸ் மற்றும் மனி­த­ உ­றவு நிபுணர் டென் சவேஜ் ஆகி­யோ­ருடன் தமது அனு­ப­வங்­களை பகிர்ந்­து­கொள்­ளவர்.

இம்­மாதம் 7 ஆம் திகதி இந்­நி­கழ்ச்சி மேற்­படி அலை­வ­ரி­சையில் ஒளி­ப­ரப்­பாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

51 வய­தான மேரி­யெலா புரொஸ்ட்ரொப் நோர்­வேயில் பிறந்­தவர். பிபிசி உட்­பட பிரிட்­டனின் பல்­வேறு வானொலி, தொலைக்­காட்­சி­களில் ஊட­க­வி­ய­லா­ள­ராக பணி­யாற்­றி­யவர். அதி­க­மாக கலைத்­துறை நிகழ்ச்­சிகள் மூலம் இவர் பிர­ப­ல­மானார். இனி­மை­யான குரல்­வளம் கொண்ட அவர், தொலைக்­காட்­சி­களில் இடம்­பெற்ற குரல்­களில் மிக இனி­மை­யான குரல் கொண்ட பெண்­ணாகத் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பல்­வேறு துறை சார்ந்த கலை­ஞர்கள், நிபு­ணர்கள், எழுத்­தா­ளர்கள் செவ்வி கண்ட அவர், தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் தோன்­றி­யுள்ளார். தொண்டர் அமைப்­பு­க­ளுக்­காக நிதி திரட்டும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள அவர், பெண்­களின் உரி­மைகள், பாலின சமத்­துவம் ஆகி­ய­வற்­றுக்­கா­கவும் பிர­சாரம் செய்­து­வ­ரு­ப­வ­ராவார்.

இரு தடவை திரு­ம­ண­மான அவர் 2 பிள்­ளை­களின் தாய் ஆவார். 2010 ஆம் ஆண்டு பாலின உரி­மைகள் மற்றும் சமத்­துவ நட­வ­டிக்கை நிதியம் எனும் நிதி­ய­மொன்­றையும் மேலும் சில­ருடன் இணைந்த அவர் ஆரம்­பித்தார்.

தொலைக்­காட்­சி­களில் மிகப் பிர­ப­ல­மாக விளங்கும் மேரியெலா புரொஸ்ட்ரொப், இந்த செக்ஸ் பொக்ஸ்” நிகழ்ச்­சியை தொகுத்­த­ளிக்­க­வுள்­ளமை இந்­நி­கழ்ச்சி குறித்த பிர­சா­ரத்தை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதே­வேளை சர்ச்­சை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­கழ்ச்­சிக்க்­கான முதல் படப்­பி­டிப்பு ஏற்­கெ­னவே இடம்­பெற்­றுள்­ளது. இப்­பெட்­டிக்குள் முதல் தடவை­யாக லினேட் எலிஸ் எனும் பெண்ணும் அவரின் கண­வ­ரான டெஸ் லஷிம்­பாவும் பாலியல் உறவு கொண்­டுள்­ளனர்.

ஒலி ஊடு­ரு­வா­த­வ­கையில் மேற்­படி பெட்டி அமைக்­கப்­பட்­டுள்­ளது. உள்ளே நடப்­பதும் அதிகம் வெளியில் தெரிய மாட்­டாது. ஏனினும் வெளியில் பார்­வை­யா­ளர்கள் சூழ்ந்­தி­ருக்கும் நிலையில் அதற்குள் பாலியல் உறவு கொள்­வது குறித்து தயக்கம் இருந்­த­தாக லினேட்டும் டெஸ்ஸும் தெரி­வித்­துள்­ளனர்.

“இந்­நி­கழ்ச்­சிக்­காக, ஆய்­வா­ளர்கள் முதலில் எம்மை அணு­கிய போது, பார்­வை­யா­ளர்கள் மத்­தி­யி­லுள்ள பெட்­டி­யொன்­றுக்குள் பாலியல் உறவு கொள்ள வேண்­டி­யி­ருக்கும் என நாம் எண்­ண­வில்லை. சாதா­ர­ண­மாக கலந்­து­ரை­யாடல் மாத்­திரம் தான் இடம்­பெறும் என எண்­ணினோம். அங்கு பாலியல் உற­வு­கொள்ள வேண்­டி­யி­ருப்­பது குறித்து கூறி­ய­போது எனது கணவர் டெஸ் தயங்­கினார். எமது பிள்­ளைகள் குறித்தும் நாம் யோசிக்க வேண்­டி­யி­ருந்­தது” என லினேட் எலிஸ் தெரி­வித்­துள்ளார்.

“அப்­பெட்­டிக்குள் செல்­லும்­போது இருந்­த­தை­விட வெளியில் வரும்­போது அதிக பதற்­ற­மாக இருந்­தது. காரணம் பொது­வாக பாலியல் உற­வு­கொண்ட பின்னர் அது குறித்து நாம் பகி­ரங்­க­மாக கலந்­து­ரை­யா­டு­வ­தில்லை” எனவும் அப்பெண் கூறி­யுள்ளார்.

பாலியல் குறித்து நேர்மையான பகிரங்க கலந்துரையாடல்களை நடத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. ஆனால், பாலியல் குறித்து பேசுவதற்கு, ஸ்டூடியோ ஒன்றில் பார்வையாளர்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பெட்டியொன்றில் ஏன் பாலியல் உறவுகொள்ள வேண்டும்? இத்தம்பதிகள் ஏனைய நாட்களில் பாலியல் உறவு கொண்டமை தொடர்பான அனுபவங்களின் அடிப்படையில் பேச முடியாதா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply