மூன்று பிள்ளைகளின் தாய் ஐந்து பேர் கொண்ட குழுவினரால் பாலியல் பலாத்காரம்

Sexual-Assaultமொற­வக்க, எத்­தி­மலை நீர்­வீழ்ச்சிப் பகு­தியில் மூன்று பிள்­ளை­களின் தாயொ­ருவர் 5 பேர் கொண்ட குழு­வி­னரால் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­ப­வ­மா­னது கடந்த ஞாயிறன்று இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்தது 38 வயதான பெண்­ணொ­ரு­வரே இவ்­வாறு பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவர் தற்­ச­மயம் மொற­வக்க வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இப்­பா­லியல் பலாத்­கார சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் ஐவரில் ஒருவர் நேற்று முன்­தினம் மாலை 5.20 அளவில் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­துடன் மேலும் மூவர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் எதிர்­வரும் 14ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர் அத்­துடன் மற்­று­மொரு சந்­தேக நபரை தேடி பொலிஸார் வலை விரித்­துள்­ளனர்.
இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது,

பலாத்­கா­ரத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பெண் 20 வய­தான இளைஞர் ஒரு­வ­ருடன் இர­க­சிய காதல் தொடர்­பினை பேணி வந்­துள்ளார். சம்­பவ தின­மான ஞாயிறன்று குறித்த இளை­ஞ­ருடன் எத்­தி­மலை நீர்­வீழ்ச்­சியை பார்­வை­யிட அந்தப் பெண் சென்­றுள்ளார்.

இதன்­போது அப்­பெண்ணின் இர­க­சிய காத­ல­ரான 20 வய­தான இளை­ஞனும் அவ­ரது நான்கு நண்­பர்­களும் சேர்ந்து நீர் வீழ்ச்­சியை அண்­டிய பகு­தியில் வைத்து மூன்று பிள்­ளை­களின் தாயான குறித்த பெண்ணை பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இந்த கூட்டு பாலியல் பலாத்­காரம் இடம்­பெறும் போது சந்­தேக நபர்­களில் ஒருவர் அதனை கைய­டக்கத் தொலை­பேசி ஒன்றின் மூலம் படமாக்கியுள்ளார். இந்நிலையிலேயே இந்த பலாத்கார சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின் றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply