தண்டவாளத்தில் உடலுறவு கொண்ட ஜோடி மீது ரயில் மோதியது: பெண் மரணம், கால்களை இழந்தார் ஆண்

rail4ரயில் தண்டவாளத்தில் உடலுறவுகொண்ட ஜோடியொன்று ரயிலில் மோதுண்டதில் பெண் உயிரிழந்ததுடன் ஆணின் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று யுக்ரைனில் இடம்பெற்றுள்ளது.

யுக்ரைனின் ஷபொரொஷியே நகரில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நண்பரின் விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் இவர்கள் தண்டவாளத்தில் உடலுறவுகொண்டுள்ளனர். இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரது 41 வயதான காதலர் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் தண்டாவளத்திற்கு அருகில் வித்தியாசமான அனுபவத்தினை பெறும் நோக்கில் நாங்கள் செயற்பட்டோம். அது இவ்வாறு ஆபத்தாக முடிந்துவிட்டது என காலினை இழந்த காதலர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மதுபோதையில் இருந்தமையினாலேயே இவர்களால் இந்த விபத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை எனவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேபோன்றதொரு சம்பவம் ஏற்கெனவே தென் ஆபிரிக்காவில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , , , , ,

Leave a Reply