கனடாவில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்!

கனடாவில் உள்ள பிரபலமான வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் கொள்ளையடித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Halifax நகரத்தில் குறித்த சமத்துவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் 6429 Quinpool Road-ல் உள்ள CIBC (Canadian Imperial Bank of Commerce) வங்கியின் உள்ளே, ஒரு அடையாளம் தெரியாத நபர் நுழைந்துள்ளார்.

அவர் சற்று சந்தேகிக்கும் விதமாக நடந்துகொண்டதாக வங்கி ஊழியர்களில் ஒருவர் கூறியுள்ளார். அவர்கள் சுதாரித்துக்கொள்ளும் முன்பாக, அந்த நபர் தான் வைத்திருந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

பின்னர் அவர் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியிலிருந்து வேகமாக தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவைத்தனர். ஆனால் அவர் எவ்வளவு பணத்தை எடுத்துக்கொண்டு சென்றார் என்பது வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அந்த கொள்ளையனை தேடிவரும் பொலிஸார், பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கொள்ளையடித்துச்ச் சென்ற நபர் சராசரி உயரம் மற்றும் கட்டமைப்பைக் கொண்டிருந்தார் என்றும், Nike அடையாளத்தைக்க கொண்ட டிராக் பேன்ட் மற்றும் கண்களை மட்டுமே காட்டும் முகமூடியுடன், ஒரு கருப்பு கோட் அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்த எவரும் 902-490-5020 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!