2050இல் உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கும்

india92050ம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை 9.7 பில்லியனை எட்டும் எனவும், இதில் சீனாவை முந்திக் கொண்டு இந்தியா தான் முதல் இடத்தில் இருக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரன்ச் இன்ஸ்டிட்யூட் ஆப் டிமாகிரபிக் ஸ்டடீஸ் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா.,விடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வை ஐ.நா., தற்போது வெளியிட்டுள்ளது.

2050ல் உலகளவில் 9.6 பில்லியன் மக்கள்தொகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2 பில்லியன் பேர் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 841 மில்லியனாக உள்ளது.

2050-2100ல் இது 3 பில்லியனாக அதிகரிக்கக் கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply