இலங்கை , ஜேர்மனி உறவு; 60 ஆண்டுகளைக் கடந்தது

srilanka-germanyஇலங்கையுடன் நெருங்கிய உறவுகள் எதிர்வரும் காலங்களிலும் வலிவான நிலையில் பேணப்படும் என இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜெர்கன் மொர்ஹார்ட் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு ஜேர்மனிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது,

மேலும் இராஜதந்திர உறவுகளை விடவும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஜெர்மனி கடும் விமர்சனத்தை வெளியிட்டிருந்ததுடன் மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்; பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவரை அவமானப்படுத்திமைக்காக ஜெர்மனி அதிருப்தியும் வெளியிட்டிருந்தது.

எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவுகள் காணப்படுவதாகவும் இந்த உறவுகள் தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் ஜேர்மனிய தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply