சிறைக்கைதிகளிடையே அழகுராணிப் போட்டி

Prisonகொலம்­பி­யா­வி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் கைதி­க­ளா­க­வுள்ள பெண்­க­ளுக்­கான அழ­கு­ராணி போட்­டி­யொன்று அண்­மையில் நடை­பெற்­றது.

பகோட்டா நக­ரி­லுள்ள இச்­சி­றைச்­சா­லையில் தற்­போது 2222 பெண் கைதிகள் உள்­ளனர். கடந்த 18 வரு­டங்­க­ளாக அக்­கை­தி­க­ளி­டையே அழ­கு­ராணிப் போட்­டிகள் நடை­பெற்று வரு­கின்­றன.

இம்­முறை நடை­பெற்ற போட்­டி­களில் தொலைக்­காட்சி மற்றும் இசைத்­துறை நட்­சத்­தி­ரங்கள் சிலர் நடு­வர்­க­ளாகப் பங்­கு­பற்­றினர்.

56 வய­தான மரியா விலே­ரியல் எனும் பெண்ணும் இப்­போட்­டி­யில் பங்­கு­பற்­றினார். 3 பிள்­ளைகள், 9 பேரப்­பிள்­ளை­களைக் கொண்ட பெண் இவர். இச்­சி­றை­யி­லுள்ள கைதி­களில் பெரும்­ப­ாலானோர் போதைப்­பொருள் கடத்தல் குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களும் வழக்கு விசா­ர­ணையை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­க­ளு­மாவர். வெளி­நா­டு­களைச் சேர்ந்த 50 பெண்­களும் இவர்­களில் அடங்­குவர்.

“இவர்கள் சிறையில் இருந்தபோதிலும் பெண்களுக்கான தன்மைகளை இழந்துவிடவில்லை” என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply