அமெரிக்க அழகுராணியின் கணனியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய முன்னாள் சக மாணவன்

America-studentஅமெ­ரிக்க அழ­கு­ரா­ணி­யாக தெரி­வான காஸிடி வூல்வ் எனும் யுவ­தியின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை வைத்­துக்­கொண்டு பணம் கேட்டு மிரட்­டிய குற்­றச்­சாட்டில் அவரின் முன்னாள் வகுப்பு மாணவர் ஒருவர் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

கலி­போர்­னியா மாநி­லத்தைச் சேர்ந்த காஸிடி வூல்வ், 19 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான மிஸ் டீன் கலி­போர்­னியா மாநில அழகுராணி­யாகி அமெ­ரிக்க தேசிய ரீதி­யி­லான மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. அழ­கு­ரா­ணி­யா­கவும் கடந்த ஓகஸ்ட் மாதம் தெரி­வா­னவர். 2012 ஆம் ஆண்­டிலும் இவர் இப்­போட்­டியில் 2 ஆம் இடம்­பெற்­றி­ருந்­ததால் ஏற்­கெ­னவே பிர­ப­ல­மா­ன­வ­ராக இருந்தார்.

இந்­நி­லையில் அவரின் நிர்­வாணப் புகைப்­ப­டங்கள் தம்­வசம் இருப்­ப­தா­கவும் அவற்றை வெளி­யி­டாமல் இருப்­ப­தற்­காக தனக்கு காஸி­டியின் “தர­மான நிர்­வாணப் படங்­களை” அனுப்ப வேண்டும் எனக் கோரி ஒருவர் மிரட்­டினார்.

19 வய­தான காஸி, இந்த மிரட்­டலைக் கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்தார். அவர் யாருக்கும் நிர்­வாணப் போஸ் கொடுக்­க­வில்லை.

இவ்­வ­ருட மார்ச் மாதம் காஸிடி வூல்வ்பின் பேஸ் புக் கட­வுச்­சொல்லை (பாஸ்வேர்ட்) யாரோ மாற்­று­வ­தற்கு முயற்­சிப்­ப­தாக அவ­ருக்கு தகவல் கிடைத்­தது. பின்னர் அவரின் டுவிட்டர் மற்றும் யாஹு கணக்­கு­க­ளி­லி­ருந்தும் இத்­த­கைய தக­வல்கள் வந்­தன. இதனால் சந்­தே­க­ம­டைந்த காஸிடி டுவிட்­டரில் அவரின் “புரபைல்” பகு­தியை பார்­வை­யிட்­ட­போது அதற்குள் தனது அரை­நிர்­வாணப் புகைப்­ப­ட­மொன்று தர­வேற்­றப்­பட்­டி­ருப்­பதைக் கண்டு அவர் அதிர்ச்­சி­ய­டைந்தார்.

தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஊடு­ரு­வி­யி­ருப்­பதை அவர் உணர்ந்­து­கொண்டார். 30 நிமி­டங்­களில் காஸி­டியின் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு மேற்­படி ஊடு­ரு­வ­லாளர் நப­ரி­ட­மி­ருந்து ஒரு தகவல் வந்­த­து. காஸிடி வூல்ப்பின் தர­மான நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை வழங்க வேண்டும் அல்­லது தன்­னுடன் ஸ்கைப் வீடியோ உரை­யா­டலில் பங்­கு­பற்றி 5 நிமி­டங்­க­ளுக்கு தான் சொல்­வதை செய்ய வேண்டும்” என அந்­நபர் வலி­யு­றுத்­தினார். தனது கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் தன்­னி­ட­முள்ள காஸி­டியின் நிர்­வாணப் புகைப்­ப­டங்கள் பல­வற்றை காஸி­டியின் பேஸ்புக் நண்­பர்­க­ளுக்கு அனுப்பப் போவ­தாக மிரட்­டினார்.

காஸி­டியின் புகைப்­ப­டங்கள் தன்­னி­ட­மி­ருப்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக அவற்றில் சில புகைப்­ப­டங்­க­ளையும் இந்­நபர் இணைத்­தி­ருந்தார்.

ஆனால் காஸிடி வூல்வ், அந்­ந­பரின் மிரட்­ட­லுக்கு அடி­ப­ணி­யாமல் அமெ­ரிக்க சமஷ்டி புல­னாய்வுப் பொலி­ஸா­ரிடம் (எவ்.பி.ஐ.) முறைப்­பாடு செய்தார்.

இது தொடர்­பாக தீவி­ர­மாக ஆய்­வு­களை மேற்­கொண்ட எவ்.பி.ஐ. பொலிஸார் ஜெரார்ட் ஜேம்ஸ் ஆப்­ரஹாம் என்­ப­வரே இந்த மிரட்­டலை விடுத்த நபர் என்­பதை கண்­ட­றிந்­தனர்.

அந்­நபர் காஸி­டியின் கல்­லூ­ரியில் ஒரே­வ­குப்பில் கல்வி கற்­றவர் என்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இவர் கணனி விஞ்­ஞா­னத்­துறை மாண­வ­ராவார்.

காஸி­டியின் மடிக்­க­ணனியை இணை­யத்­தளம் மூலம் ஊடு­ருவி, அவர் அறையில் நடப்­ப­வற்றை கண்­கா­ணித்து மடிக்­க­ணி­னி­யி­லுள்ள கமெரா மூலம் சில புகைப்­ப­டங்­களை ஆப்­ரஹாம் பதி­வு­செய்­துள்­ளமை தெரி­ய­வந்­தது. அதே­வேளை காஸி­டியை மாத்­தி­ர­மல்­லாமல் மேலும் சுமார் 150 பேரின் கணனி­களை ஆப்­ரஹாம் ஊடு­ருவி இதே­போன்ற மிரட்­டல்­களை விடுத்து அவர்­களை தனது அடி­மைகள் போன்று நடத்­தி­யுள்­ள­மையும் கண்­ட­றி­யப்­பட்­டது. கனடா, அயர்­லாந்து போன்ற நாடு­களைச் சேர்ந்த பெண்­களும் சிறு­மி­களும் ஆப்­ர­ஹா­மினால் மிரட்­டப்­பட்­ட­வர்­களின் பட்­டி­யலில் இருந்­தனர்.

அயர்­லாந்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, “எனக்கு 17 வய­துதான் ஆகி­றது. இத­யத்தில் கருணை காட்டு” என ஆப்­ர­ஹா­மிடம் கெஞ்சி மின்­னஞ்சல் அனுப்­பி­யுள்ளார். ஆனால், “எனக்கு இதயம் இல்லை” என ஆப்­ரஹாம் பதி­ல­ளித்­துள்­ள­மையும் அதி­கா­ரி­க­ளுக்­கு­ தெ­ரி­ய­வந்­தது.

தனது கோரிக்­கையை நிறை­வேற்­றாத சிலரின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை ஆப்­ரஹாம் இணை­யத்­த­ளங்­களில் வெளி­யிட்­டி­ருப்­பதும் தெரிய வந்­தது. கடந்த ஜூன் மாதம் ஆப்­ர­ஹாமின் வீட்டில் தேடுதல் நடத்­திய பொலிஸார் பல நவீன தொழில்­நுட்ப சாத­னங்­க­ளையும் ஆபாச வீடி­யோக்கள் பல­வற்­றையும் கைப்­பற்­றினர்.

அதன்பின் எவ்.பி.ஐ. பொலி­ஸா­ரிடம் சர­ண­டைந்த ஆப்­ரஹாம், கடந்த வார இறு­தியில் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார். அவரை 50,000 அமெ­ரிக்க டொலர் பிணையில் செல்ல அனு­ம­தித்த நீதிவான் பல்­வேறு நிபந்­த­னை­க­ளையும் விதித்தார். ஆப்­ரஹாம் தனது வீட்­டி­லேயே இருக்க வேண்டும். அவரின் நட­மாட்­டத்தைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக ஜி.பி.எஸ். சாத­ன­மொன்றை அணிந்­தி­ருக்க வேண்டும். வீட்­டி­லுள்ள கண­னியில் கண்­கா­ணிப்பு மென்­பொ­ரு­ளொன்றை தர­வேற்­றி­யபின் பாட­சாலை வேலை­க­ளுக்கு மாத்­திரம் அதை பயன்­ப­டுத்­தலாம், வேறு கண­னி­களை பயன்­ப­டுத்­தக்­கூ­டாது ஆகி­ய­னவும் இந்­நி­பந்­த­னை­களில் அடங்கும்.

இது தொடர்பான வழக்கில் ஜெரார்ட் ஆப்ரஹாம் குற்றவாளியாக காணப்பட்டால் 2 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எவ்.பி.ஐ. பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்ரஹாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் கருத்துத் தெரிவித்த அழகுராணி காஸிடி வூல்வ், தன் மீது விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக எவ்.பி.ஐ. அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் தான் உதவிபுரிந்துள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply