திஸ்ஸவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள ரணில் மறுப்பு

ranilஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மஹநுவர, குண்டசாலை தொகுதியின் ஐ.தே.க அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாகக் கட்சித் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் குண்டசாலை தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டே திஸ்ஸ அத்தநாயக்க அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply