மோசமான பயணக் கட்டுப்பாடு கொண்ட நாடுகளுடன் இலங்கை

Sri_Lankan_passportஉலகில் மிகவும் மோசமான பயண கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை 88 வது இடத்தில் உள்ளது.

ஹென்லி அன்ட் பார்ட்னர் நிறுவனம் 2013 ஆம் ஆண்டு சுதந்திரமான பயணம் செய்யக் கூடிய உலக நாடுகள் வரிசையை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் இலங்கையை அடுத்து ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உலகில் மோசமான பயண கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு பிரஜைகளின் நடமாட்டத்தையும் தமது எல்லைகளை கடப்பதற்கும் ஒரு முக்கியமான கருவியாக அரசாங்கங்கள் விசா கட்டுப்பாடுகளை பயன்படுத்தி வருகின்றன என அந்த நிறுவனம் வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டவர்கள் தாம் விரும்பும் பகுதிக்குள் நுழைய பெரும்பாலான நாடுகள் விசாக்களை நிலையான தேவையாக கருதுகின்றன. இதில் 38 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு மட்டுமே விசா அனுமதியின்றி செல்ல வசதிகள் உள்ளன.

இந்த தரப்படுத்தலில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் 98 வது இடத்தில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply