சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையும் நண்பனும் கைது
அதிகரித்து வரும் தகாத உறவுகள் – சகோதரரின் 10 வயது மகளைப் துஷ்பிரயோகம் செய்தார் பெரியப்பா –
தனது சகோதரரின் 10 வயது மகளைப் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் கூறப்படும் 49 வயது பெரியப்பா முறையான ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் வட்டக்கள்ளி எனும் பிரதேசத்தில் வசித்து வரும் சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தாயும் தந்தையும் இல்லை எனவும், தனது முத்த சகோதரியுடனேயே சிறுமி வளர்ந்து வருவதாகவும் தெரவிக்கப்படுகின்றது.
கடந்த 28 ஆம் திகதி அவசர வேலை ஒன்றின் நிமித்தம் வெளியே செல்லவேண்டி இருந்தமையினால் வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ள சகோதரி, தனது தங்கையான சிறுமியை தந்தையின் மூத்த சகோதரனான பெரியப்பாவிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். இந்த சமயமே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனக்கு நேர்ந்தவை பற்றி சிறுமி தன் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்தே சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட சிலாபம் பொலிசார் சந்தேக நபரை புதன்கிழமையன்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையும் நண்பனும் கைது
ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரையும் சிறுமியின் தந்தையையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது அதே தோட்டத்தைச்சேர்ந்த 36 வயதான ஒருவரையே கந்தப்பளை பொலிசார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்தை சேர்ந்த ஏழு வயதான சிறுமியொருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ள நிலையில் சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள நபரும் வீட்டில் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன்போதே தந்தைக்கு தெரியாமல் குறித்த நபர் சிறுமியை துஷ்;பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதை அறிந்துகொண்ட தந்தை மகளை தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு தங்கவைத்துள்ளார்.
உறவினர் வீட்டில் வைத்து சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போதே சிறுமி விடயத்தை கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சிறுமியின் தந்தையை கைதுசெய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேட ஆரம்பித்துள்ளனர்.
தன்னை பொலிசார் தேடுவதை அறிந்த சந்தேகநபர் விசமருந்திய நிலையில் பொலிஸில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து இருவரையும் விசாரணைக்கு உட்படுத்திவருவதாக தெரிவித்த பொலிஸார் இருவரையும் நீதின்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
















