பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் நிறுவனமாக மாற்றமடையக் கூடாது – ஜீ.எல்.பிரிஸ்

peries2பொதுநலவாய நாடுகள் அமைப்பு நீதி வழங்கும் ஒர் நிறுவனமான மாற்றமடைந்து விடக் கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இறைமையுடைய நாடுகளின் தன்னார்வ கூட்டுறவு அமைப்பாக பொதுநலவாய நாடுகள் அமைப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்தை நீதி வழங்கும் ஓர் பொறிமுறைமையைக் கொண்ட அமைப்பாக மாற்றக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சர்வதேச தரப்பின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். சில சர்வதேச தரப்புக்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அளவிற்கு உலகின் வேறு நாடுகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளினால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை பல நாடுகள் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: ,

Leave a Reply