சனி கிரகத்தின் துணை கிரகத்தில் பிளாஸ்டிக்

moonசனி கிரகத்தின் துணை கிரகத்தில் பிளாஸ்டிக் மூலப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சனி கிரகத்தில், ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் காசினி என்னும் விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்தியது.

இந்த விண்கலம் சனியின் துணை கிரகமான டைட்டனிலும் ஆய்வு மேற்கொண்டது. அப்போது டைட்டனின் வான்வெளியில் ‘புரோபைலீன்’ என்ற மூலப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தது.

இதனை காசினி விண்கலம் ‘இன்பிராட் ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ மூலம் கண்டுபிடித்துள்ளது. ‘புரோபைலீன்’ என்ற இந்த இரசாயன மூலப்பொருள் பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தபடுகிறது. இது நாசாவிற்கு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும்.

டைட்டன் துணை கிரகத்தில் மட்டும்தான் மேகங்கள் உள்ளன என்பதும், அங்கு மீத்தேன் மழை பொழியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply