நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியாவுக்கு அவரது நேரமும் நன்றாகவே இருக்கிறது. ஆர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி இளம் நாயகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் நஸ்ரியா.
இதனால் தான் நடிக்க வேண்டுமெனில் கதை என்னைச் சுற்றி அமைய வேண்டும் என அம்மணி இயக்குநர்களைக் கேட்கிறாராம். அப்படி தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டுமே தற்போது தேர்வு செய்கிறாராம் நஸ்ரியா.
இந்நிலையில் அண்மையில் வெளியான ‘ராஜா ராணி’ படமும் ஹிட்டாகி நஸ்ரியாவுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துள்ளது. இதனால் தற்போது நடித்து வரும் படங்களிலும் தனக்கு கூடுதல் காட்சிகள் வைக்கும்படி இயக்குநரிடம் அன்பு வேண்டுகோள் வைக்கிறாராம்.
நடிகைகள் சற்றே முன்னணிக்கு வந்ததும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை பாடாய் படுத்துவார்கள் என வழக்கமாககவே கூறப்படும். அந்த வரிசையில் நஸ்ரியாவும் இணைந்து விட்டாரோ?
















