மினுவாங்கொடையைச்சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரொருவரிடம் தங்கக் காசுகள் எனக்கூறி தங்க முலாம் பூசப்பட்ட ஈயத்துண்டுகளைக் கொடுத்து ஏமாற்றி பத்து லட்ச ரூபா வரை மோசடி செய்தமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கெக்கிராவ நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
செனவிரத்தன என்ற நபரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டவராவார். புதையல் தோண்டும்போது கிடைத்த தாகக் கூறி தங்க முலாம் பூசப்பட்ட ஈயத் துண்டுகளைக் கொடுத்து ஆயுர்வேத பெண் வைத்தியரிடமிருந்து பத்து லட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில்
இதுந்நபரை ஆஜர்செய்தபோது தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
















