அஞ்சலி எங்க இருக்காங்கன்னு தெரியாது: ஜெய்

jai-press-meetஅண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ராஜா ராணி. இப்படத்தின் வெற்றி படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. விரைவில் இப்படம் இந்திக்குச் செல்கிறது. இதனிடையே நடிகர் ஜெய் ராஜா ராணி படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள பத்திரிக்கை நண்பர்களை சந்தித்தார்.

இரண்டு ஆண்டுக்கு முன்பு உங்களை சந்திச்சேன். அதற்கு அப்புறம் சந்திக்கிற வாய்ப்பு அமையாம போச்சு. ராஜா ராணி படம் ரீலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிட்டு இருக்கு அதுக்கு உங்க எல்லாருக்கு நன்றின்னு நிருபர்களிடம் சொல்லி முடித்தார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் ஜெய் பதிலளித்தார்.

கேள்வி : உங்களுக்கும்(ஜெய்) நஸ்ரியாவுக்கும் லவ்வுன்னு சொல்றாங்களே நிஜமா?

பதில் : ”யாருங்க அது”…

கேள்வி : உங்களுக்கு காதல் திருமணமா, பெற்றோர் நிச்சயித்த திருமணமா?

பதில் : நிச்சயமா காதல் திருமணம் தான், எனக்கு காதல் திருமணத்தில் தான் நம்பிக்கை இருக்கு.

கேள்வி : உங்க லவ்வை ட்விட்டரில் சொல்லுவீங்களா, நிருபர்களை கூப்பிட்டு சொல்லுவீங்களா?

பதில் : நான் டுவிட்டரிலேயே இல்லீங்க, டுவிட்டர்ல இங்கிலீஷ் அதிகமா தேவைபடுதுன்னு அந்த பக்கமே போறது இல்ல. நிச்சயமா உங்களை கூப்பிட்டுதான் சொல்வேன்.

கேள்வி : நயன்தாராவுடன் நடித்த அனுபவம் பற்றி?

பதில் : நயன் உடன் நடிக்கும் போது அவங்க ரொம்ப கேஷுவல்லா நடிச்சாங்க எனக்கு நயன் கூட நடிச்சதுல எந்த கஷ்டமும் தெரியலன்னு ஜெய் சொல்ல… நயன்னு சொல்ற அளவுக்கு அவ்வளவு க்ளோஸ்சான்னு இன்னொரு கேள்வி பறந்துச்சு..அதற்கு ஜெய் இல்லிங்க எல்லாரும் அப்படித்தானே கூப்பிட்றாங்க அதான் நானும் சொன்னேன்னு சொல்லி அடுத்த கேள்விக்கு எஸ்கேப்…

கேள்வி : அஞ்சலி எங்க இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமாமே?

பதில் : எனக்கு தெரியாதுங்க உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அவங்க கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு…என பதிலளித்தார்.

Tags: ,

Leave a Reply