வட மாகாண சபை அமைச்சுப் பதவிகள் குறித்து நாளை மாலை கூடி முடிவெடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“பெரும்பாலும் அனேகமாக திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் நடக்கக்கூடும். இன்னும் அது சம்பந்தமான நிச்சயத்தன்மை இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. இவ்வாறுதான் நடக்கக்கூடும் என நம்புகின்றேன்.
நாங்கள் பல விடயங்கள் பற்றியும் பேசிக் கொண்டு வந்தோம். எங்கு எப்பொழுது சத்தியப்பிரமாணம் நடைபெற வேண்டும் என்பது சம்பந்தமாகவும் யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாகவும் பேசிக் கொண்டு வந்தோம் அதில் எதுவும் பிரச்சினை இல்லை.
நாங்கள் முடியுமானவரை அந்தந்த இடங்களுக்கு அதாவது பிரதேசங்களுக்கும் மாவட்டங்களுக்கும் கட்சிகளுக்கும் இடம்கொடுக்கும் விதத்தில் நாங்கள் இதை பிரித்து கொடுக்கத்தான் எண்ணியுள்ளளோம்.
அதற்கு ஏற்றவாறு நாங்கள் பேசிக் கொண்டோம். முடிவெடுக்க வேண்டிய அவசரம் இல்லாதபடியால் நாளை நாங்கள் சந்தித்து பேசவுள்ளோம். எல்லோரும் கொழும்பில் உள்ளதால் நாங்கள் பேசி நாளைக்கு முடிவு எடுப்போம். நாளை பின்னேரம் சந்திப்பு உள்ளது.”
















