ராஜா சுப்பையா தனது படத்துக்கு சரவணன் என்கிற சூர்யா என்று பெயர் வைத்துள்ளார். சரவணன் என்பது நடிகர் சூர்யாவின் இயற்பெயர். ஆக, படத்தின் தலைப்பு நேரடியாக சூர்யாவை குறிப்பது போலவே தெரியும்.
இந்த தலைப்பால் யாருடைய பெயரும் கெட்டுப்போகப் போவதில்லை. என்றாலும் சரவணன் என்கிற சூர்யா பெயருக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் சூர்யா.
இதுகுறித்து அவர் நடிகர் சங்கத்திடம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
படத்தின் கதையே அந்த தலைப்பாகத்தான் இருக்கு. அதனால் பெயரை மாத்துற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் ராஜா சுப்பையா.
என்ன நடக்கப் போகிறது… வேடிக்கை பார்ப்போம்.
















