மென்பொருள் நிறுவனமான அடோப் நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பு ஹெக் செய்யப்பட்டுள்ளதுடன் பாவனையாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளன.
அந்நிறுவனத்தின் தகவலின் படி சுமார் 2.9 மில்லியன் பாவனையாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
போட்டோஷொப், இண்டிசைன், இலஸ்ட்ரேடர் என பல பிரபல மென்பொருள் உற்பத்திகளை அடோப் கொண்டுள்ளது.
பாவனையாளர்களின் கணக்குகள், கடவுச்சொற்கள், கனடட்டை மற்றும் வரவட்டை இலக்கங்கள் போன்ற தரவுகள் ஹெக்கர்களினால் களவாடப்பட்டுள்ளதாக அடோப் தெரிவிக்கின்றது.
இதுமட்டுமன்றி அடோப் பாவனையாளர்கள் பலரின் கணக்குகளும் ஹெக்கர்களினால் அழிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அடோப் எக்ரோபட், கோல்ட்பியுசன், கோல்ட்பியுசன் பில்டர் போன்ற மென்பொருட்களின் கோர்ஷ் கோட்கள் தொடர்பான தகவல்களின் உள்ளேயும் ஹெக்கர்கள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பாவனையாளர்களின் கடவுச் சொல்லை அடோப் மாற்றியுள்ளது.
அதேபோல் பாதிக்கப்பட்டோர்கள் அடோப் இணையத்தளங்களுக்கான தங்களது கடவுச் சொல்லை மாற்றும்படி அடோப் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
















