ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது:

sitharthanவட மாகாண சபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப் போவதாக TELO இயக்கம் அறிவிப்பு:-

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது:
வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thanks BBC

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப் போவதாக டெலோ இயக்கம் அறிவிப்பு:-

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப் போவதாக டெலோ இயக்கம் அறிவித்துள்ளது. போர்க் குற்றவாளியாக கூட்டமைப்பினால் தேர்தல் காலத்தில் முன்மொழியப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஸ.

அவர் முன்னிலையில் தமிழ் மக்களினால் ஏகோபித்த ஆதரவினால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சீ.வி.விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதனாலேயே டெலோவின் பொதுக்குழு நேற்று வவுனியாவினில் ஒன்று கூடி பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பதென தீர்மானித்துள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதனிடையே கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளும் இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைமை மஹிந்தரை சந்தித்தமை மற்றும் மற்றும் முதலமைச்சரை அவர் முன்னிலையினில பதவியேற்க திட்டமிட்டமை தொடர்பில் அவர்கள் அதிர்ப்த்தி அடைந்துள்ளதாகவும் தமிழரசு கட்சியிலும் சரவணபவன் மற்றும் சுமந்திரன் தவிர்ந்த ஏனையவர்கள் சம்பந்தனது நடவடிக்கைகளால் அதிர்ந்து போனாலும் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு செல்ல வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு தற்போது ஏற்பட்டு உள்ளதாகவும் எனினும் பொது செயலர் மாவை சேனாதிராசா இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply