ரஷ்ய கப்பல்கள் இரண்டு திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரம்

rusia-shipதிருகோணமலை துறைமுகத்தில் ரஷ்ய நாட்டு கப்பல்கள் இரண்டு நங்கூரமிட்டுள்ளன.

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்த இரண்டு கப்பல்களும் வந்துள்ளன.

இவற்றில் ஒன்று கடற்படை கப்பலாகும். இதில் 65 உத்தியோகத்தர்களும் 464 படைவீரர்களும் உள்ளனர்.

வரயாட் என்னும் பெயர் கொண்ட இக்கப்பல் 187 மீற்றர் நீளம் கொண்டதாகும்.

மற்றைய கப்பல் வர்த்தக கப்பலாகும். இது 162 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 75 உத்தியோகத்தரகள் கடமையாற்றுகின்றனர்.

இக்கப்பல்கள் இரண்டும் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன.

Tags: ,

Leave a Reply