தலைவர் பிரபாவின் வீடு தொடர்பாக புதுக் கதை கூறுகிறார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

Prabhakaran4புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரால் குண்டுவைத்து அழிக்கப்பட்ட புலிகளின் பதுங்குகுழியை, பிரபாகரனின் ஆவி என்று வர்ணித்துள்ளார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்.

நேற்றுமுன்தினம் மாலை புதுக்குடியிருப்பில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியது என்று நம்பப்படும், பதுக்குகுழியை சிறிலங்காப் படையினர் அழித்திருந்தனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,

“நாம் பிரபாகரனின் பதுங்குகுழியை அழித்துள்ளோம். தீவிரவாதியின் ஆவியை உயிரோடு வைத்திருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

விடுதலைப் புலிகளின் தடயங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.அதனால் தான், புதுக்குடியிருப்பில் இருந்த பதுங்குகுழி அழிக்கப்பட்டது.

இந்தப் பதுங்குகுழியை சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றாமல் பதுங்குகுழியை, குண்டுவைத்து அழித்தால், அந்த அதிர்வினால், சுற்றுப்புறத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளும் வெடிக்கும் ஆபத்து இருந்தது.

இதனால் தான், கண்ணிவெடிகளை அகற்றியதன் பின்னர் இந்தப் பதுங்குகுழி அழிக்கப்பட்டது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply