இப்படிக்கூடவா பப்ளிசிட்டி தேடுவது? – தள்ளாடும் தமிழ் சினிமா!

surya-sneha-dhanushமுன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதை தான் அந்தப் படத்திற்கான விளம்பரமாக இருக்கும். பின்னர், பிரபலமான நடிகர், நடிகைகளைக் காட்டி தியேட்டருக்கு வரவழைத்தார்கள்.

காலம் மாற மாற விளம்பர யுக்திகளும் மாறிக்கொண்டே வருகின்றன. இந்த மாற்றம் நல்ல முறையில் நிகழ்ந்தால் கொண்டாடலாம்.

ஆனால், ‘எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்’ என்ற கதையாக நாளுக்கு நாள் தள்ளாட்டத்திலேயே தத்தளிக்கிறது தமிழ் சினிமா.

விஷயம் இதுதான். பிரபலமானவர்களை வைத்துப் படம் எடுக்க முடியாதவர்கள், அவர்கள் பெயரை படத்தின் தலைப்பாகவே வைத்து ரசிகர்களைக் கவர்கிற(?) கொடுமைதான் இப்போது நடக்கிறது.

‘சிநேகாவின் காதலர்கள்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில், ஒரிஜினல் சிநேகாவே சில காட்சிகளில் நடிக்கிறார் என ஆரம்பத்தில் அள்ளிவிட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதற்குப் பிறகு ‘தனுஷ் 5-ம் வகுப்பு’ என்றொரு படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று தனுஷ் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு தலைப்பு விவகாரமானது.

தற்போது ‘சரவணன் என்கிற சூர்யா’ என ஒரு படத்துக்குப் பெயர் வைத்துள்ளனர். ராஜா சுப்பையா என்பவர் ஹீரோவாக நடிப்பதுடன், இந்தப் படத்தை இயக்குவதும் அவர் தான்.

சரவணன் என்கிற சாதாரண இளைஞன், தன்னை நடிகர் சூர்யாவாக கற்பனை செய்துகொண்டு வாழ்வதாகவும், பேரழகி ஒருத்திக்காகக் காத்திருப்பதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

தன்னுடைய நிஜப் பெயரையும், சினிமாப் பெயரையும் சேர்த்து தலைப்பாக்கி இருப்பதால், பயங்கர கோபத்தில் இருக்கிறாராம் சூர்யா. கதையும் சூர்யாவைப் பற்றி இருந்தாலும், சூர்யாவிடம் இதுபற்றி படக்குழுவினர் யாருமே அனுமதி கேட்கவில்லையாம். இதனால் அப்செட்டான சூர்யா, தலைப்பையும், கதையையும் மாற்றும்படி சொல்லியிருக்கிறாராம்.

– சி. காவேரி மாணிக்கம்

Tags: , , ,

Leave a Reply