கிழக்கு மாகாண சபையின் தீர்மானம் குறித்து தாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்கிறார் சுசில் பிரேம் ஜெயந்த்

susil13ஆவது அரசியலமைப்பை உள்ளவாறே அமுல்படுத்துமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பில் தாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்பில் எதுவித மாற்றமும் செய்யாது முன்னெடுக்க வேண்டும் என்ற அதேநிலைப்பாட்டில் ஐ.ம.சு.மு.யில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் அடங்கலான சில கட்சிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காணி அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழே உள்ளது எனவே அது தொடர்பில் எது வித பிரச்சினையும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply