நவராத்திரியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

navarathiriநவராத்திரி விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் சதி திட்டத்தை தொடர்ந்து மும்பையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. மும்பையில் நவராத்திரி விழாவின் போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம் என்ற தகவல் இந்திய உளவுத்துறை மூலம் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. சமீபத்தில் அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அப்சல் உஸ்மானி பொலிஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டான். அவன் இன்னும் பொலிஸ் பிடியில் சிக்கவில்லை.

இந்த நிலையில் அப்சல் உஸ்மானி இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இதர தீவிரவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரியவந்து உள்ளது.

இதைத் தொடர்ந்து மும்பையில் பொலிசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மகாலட்சுமி கோவில் உள்பட முக்கிய வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க மும்பை நகர பொலிஸ் கமிஷனர் சத்யபால் சிங் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்பேரில் முக்கிய இடங்களில் பொலிசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வாகன சோதனையையும் பொலிசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply