அரசாங்கத்தின் மூடத்தனமாக முடிவுகளால் ஏற்பட்டுள்ள நிலைமை – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கத்தின் ஞானமற்ற முட்டாள்த்தனமான தீர்மானங்கள் காரணமாக பசளைகள், மருந்துகளை உரிய நேரத்தில் வழங்கவில்லை என்பதால், காய்கறிகளின் விலை வரலாற்றில் மிகப் பெரியளவில அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று பாணந்துறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரிசி விலைக் கட்டுப்பாட்டுக்காக வர்த்தமானியை வெளியிட்டனர். அதனை திரும்ப பெற்றனர். சீனி விலைக் கட்டுப்பாட்டுக்கும் வர்த்தமானியை வெளியிட்டனர். அதனையும் திரும்ப பெற்றனர்.
தற்போது பசளைக்கு வர்த்தமானியை வெளியிட்டனர். அதனையும் திரும்ப பெற்றுள்ளனர். இவற்றினால் ஏற்பட போகும் நிலைமைகள் காய்கறிகளில் உணர ஆரம்பித்துள்ளது.

அனைத்து அறுவடைகளும் குறைந்துள்ளன. நாட்டை பஞ்சத்தை நோக்கி தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!