ரணில் கட்சித் தலைமைப் பதவியை துறப்பதற்கு தயாராக இருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைப் பதவிக்கு தம்மை விடவும் பொருத்தமான ஒருவர் இருந்தால் பதவியை துறந்து அவருக்கு சந்தர்ப்பம் வழங்க ரணில் விக்ரமசிங்க தயங்க மாட்டார் என தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கு கட்சித் தலைவர் பொறுப்பில்லை எனவும், தொகுதி அபைம்பாளரே இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவி;த்துள்ளார்.
கட்சியின் மேம்பாட்டிற்காக தாமும் தமது பதவியை துறக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியை துறந்தால் கட்சி மேலும் நெருக்கடிகளை சந்திக்குமே தவிர, பிரச்சினகைள் குறைவடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















