விக்கியின் பதவியேற்பை கண்டித்து நடைபயணம்; வேட்பாளர் தம்பிராசா ஆரம்பித்தார்

thampy-demoவட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த முன்னிலையில் பதவியேற்பதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மாகாண சபை வேட்பாளர் மு.தம்பிராசா, வவுனியாவிலிருந்து யாழ்.நோக்கி நடை பயணத்தை நேற்று சனிக்கிழமை ஆரம்பித்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகம்மாள் கோயிலில் இருந்து நேற்று சனிக்கிழமை நண்பகல் இந்த நடை பயணத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முடிவாகியுள்ளது.

இவர்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், ஜனாதிபதியும் பதிலுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைவைக்கப்பட்டுள்ள 500 பேரையாவது ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என்று தம்பிராசா கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணை, தமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே. அதற்கான உத்தரவாதத்தை ஜனாதிபதி வழங்கினால் அவர்கள் முன்பாக பதவியேற்கலாம் என்றும் அவர் கூறினார்.

இவை எதுவுமில்லாமல் ஜனாதிபதி முன்பாக முதலமைச்சர் பதவியேற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனைக் கண்டித்தே நடை பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என்று தம்பிராசா மேலும் தெரிவித்தார்.

புளியங்குளத்துடன் நேற்றைய நடைபயணம் முடிவடைந்த நிலையில் இன்று அது தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply