இரத்த அழுத்தத்தை சீராக்கும் பாதாம்

Almondsபாதாமில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் அதிகமாக கொட்டி கிடக்கின்றது. வயது அதிகரிக்கும் போது மனிதர்களின் உடலில் குரோமியம் உப்பின் அளவு குறையும். இதை ஈடுகட்ட, பாதாம் பருப்பு தினமும் எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோய் குணமாக்கவும், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

* மாவுச் சத்து குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு பாதாம் பருப்பு.

* மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. அதுமட்டுமின்றி புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.

* பாதாம் பருப்பில் உள்ள லோனோலிக் அமிலம் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

* இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

* பாதாம் பால் அனைத்து வயதினரின் மூளைத் திறனை அதிகரிக்கிறது. ஆறுமுதல் எழுபது வயதுக்காரர்களும் தினமும் ஐந்து, ஆறு பாதாம் பருப்புகளை நன்கு மென்று சாப்பிடும் பழக்கம் கொள்வது நல்லது.

* பாதாமில் உள்ள நார்ப் பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

Tags: , ,

Leave a Reply