ஜி.வி.பிரகாஷுடன் இணையும் ப்ரியா ஆனந்த்

gv-pirakashஇதோ அதோ என்றிருந்த ‌ஜி.வி.பிரகாஷின் கதாநாயகன் அவதாரம் வந்தேவிட்டது. அடுத்த மாதம் தொடங்கயிருக்கும் பென்சில் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக அறிமுகமான சில வருடங்களிலேயே பொரி உயரத்தை தொட்ட ‌ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

அவர் கதாநாயகனாக போவதாக என பல வருடங்களாக கூறி வருகின்றனர். முருகதாஸின் தயாரிப்பில் ‌ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாகவும் முன்பு கூறப்பட்டது. ஆனால் அந்த புராஜெக்ட் டேக்ஆஃப் ஆகவில்லை.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ மேனனின் அசிஸ்டெண்ட் மணி நாகரா‌ஜ் இயக்கும் பென்சில் என்ற படத்தில் நடிக்க ‌ஜி.வி.பிரகாஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதில் அவர் ப்ளஸ் டூ மாணவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply