சென்னையில் ‘மேக வெடிப்பு’: திடீரென கொட்டித்தீர்த்த கனமழை!

சென்னையில் தற்போது பெய்து வரும் மழை மேக வெடிப்பு மழையாக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசை காற்று காரணமாக புத்தாண்டு தினம் வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அதன்படியே தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    
முக்கியமாக சென்னை எம்ஆர்சி நகரில் 94 மிமீ மழை இதுவரை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 50 மிமீ மழை வரை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 25 மிமீ மழை வரை பெய்துள்ளது. எழும்பூர், கிண்டி, சேத்துப்பட்டு, சென்ட்ரல், புரசைவாக்கம் விடமால் கனமழை பெய்து வருகிறது.
மார்கழி பிரதோஷம், அமாவாசை – டிசம்பர் 31 முதல் ஜனவரி 3 வரை சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி

கிளவுட் பர்ஸ்ட்
இந்த நிலையில் சென்னையில் ஒருவேளை இப்படி பேய் மழை பெய்ய காரணம் கிளவுட் பர்ஸ்ட்டாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதே விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். இதை கிளவுட் பர்ஸ்ட் என்று அழைப்பது சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை தமிழில் மேகவெடிப்பு என்று கூறுவார்கள். ஆனால் இதை அப்படியே பொருள் கொள்ள கூடாது.

மேகம் என்பதை தண்ணீர் நிரம்பிய பலூன் போல கருது வெடிப்பதாக நினைத்தே முன்பு இந்த பெயர் வைக்கப்பட்டது. ஆனால் வானிலை உலகம் இது உண்மை இல்லை என்று உறுதி செய்துவிட்டது. மாறாக மேக வெடிப்பு என்பது கனமான மழை நீரை கொண்ட மேகங்கள் ஒரே நொடியில் மொத்தமாக தண்ணீராக மாறும் நிலை ஆகும்.

அதாவது கனமான மழை நீர் கொண்ட மேகம் நமக்கு மேலே இருக்கிறது என்று வைத்துகொள்வோம். இதை சுற்றி குளிர்காற்று இருக்கும் போது, பூமியில் இருந்து மேலே செல்லும் வெப்ப காற்று இந்த குளிர் காற்றோடு உரசும். இந்த வெப்ப காற்றும், குளிர் காற்றும் இணைவதால் திடீரென condensation ஆகும். அதாவது வாயுப்பொருள் திடீர் திரவ பொருளாக மாறுவது ஆகும்.

எப்படி ஏற்படும்
இப்படி குளிர் காற்றும், சூடான காற்றும் இணைந்து திடீரென மேகத்தை திரவமாக மாற்றும். இதன் காரணமாக ஏற்படும் மழைதான் மேக வெடிப்பு அல்லது கிளவுட் பர்ஸ்ட். 20-30 சதுர கி.மீ பரப்பளவில் எதிர்பாராத விதமாக 100 மி.மீ / மணிநேரத்திற்கு மேல் மழை பெய்தால் அதை இப்படி அழைப்பார்கள். சென்னையில் இன்று மாலை இப்படித்தான் பல இடங்களில் 1 மணிநேரத்திற்குள் கிட்டத்தட்ட 100 மிமீ வரை மழை பெய்துள்ளது.

இதனால் சென்னையில் பெய்தது மேக வெடிப்பு மழையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக நுங்கம்பாக்கத்தில் பெய்த மழை மேக வெடிப்பாக இருக்குமோ என்று கருதப்படுகிறது. ஆனால் வானிலை மையம் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.