எகிப்தில் நேற்று நாடு முழுவதிலும் எழுந்த வன்முறையில் 51 பேர் பலியாகியுள்ளனர்.
எகிப்து பாதுகாப்பு படையினருக்கும் ஜனாதிபதி பதவியிலிருந்து சென்ற முர்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 51 பொதுமக்கள் பலியாகினர்.
கெய்ரோவில் துவங்கிய வன்முறை நேரம் செல்ல செல்ல மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
முர்சி ஆதரவாளர்கள் தீ பந்தம் மற்றும் பெட்ரோல் குண்டுகளை பொலிசார் மீது எறிந்தனர்.
பின்னர் வன்முறையை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
















