இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
சர்ச்சைக்குரிய சம்பூர் அனல் மின்நிலையம் மற்றும் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பிலான திட்டமொன்றையும் இந்திய அரசாங்கம் முன்னெடுக்க உள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பெர்துநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இந்திய பிரதமர் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை யாழ்ப்பாணம் வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்திப்பார்.பின்னர் இந்திய அரசினது பயனாளிகளிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றிலும் பங்கேற்கவுள்ளார்.
அதன் பின் வடக்கு முதல்வரை அழைத்து பேசவுள்ள அவர் அழைத்துவரப்படவுள்ள இந்திய பத்திரிகையாளர்களுடன் சந்திப்பொன்றினையும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















