ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இணைந்து செயற்பட்டு வருவதால் அவர் நீண்டகாலத்திற்கு எதிர்க் கட்சித் தலைவராக இருக்க அதிர்ஷ்டம் கிடைக்கட்டும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
தம்புள்ளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் மாத்தறையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் மிகவும் தெளிவாக வெளியில் தெரியவந்துள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் காணப்பட்ட மோதல்கள் தற்பொழுது வெளியரங்கில் நடக்க ஆரம்பித்துள்ளன. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்க வேண்டும். அவரை தவிர அந்தப் பதவிக்குப் பொருத்தமான எவரும் அந்த கட்சியில் இல்லை.
ரணில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்டு வருகிறார். இதனால் சதாகாலமும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க அதிர்ஷ்டம் கிடைக்கட்டும் என்றார்.
















