தன்னை போத்­தலில் அடைத்த பெண்ணை 3 மாதங்­களின் பின் தீண்­டிய பாம்பு

Snake3 மாதங்­களாக போத்­தலில் அடைக்­கப்­பட்டிருந்த பாம்பொன்று வெளியில் வந்து, தன்னை போத்­தலில் அடைத்த பெண்ணை தீண்­டிய சம்­ப­வ மொன்று சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

சீனாவின் ஹெய்­லொங்­ஜிஆங் மாகா­ணத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரே இவ்­வாறு பாம்­பினால் தீண்­டப்­பட்­டுள்ளார்.

விரியன் பாம்­பொன்­றினை குறித்த பெண் வைன் நிரப்­பிய கண்­ணாடி போத்­தலில் இட்டு 3 மாதங்­க­ளுக்கு முன்பு அடைத்து வைத்­துள்ளார். இந்­நி­லையின் வைன் சற்றே குறை­வ­டைய மீண்டும் அதில் வைனை நிரப்புவ­தற்கு திறந்­துள்ளார்.

இதன்­போது திடீ­ரென வெளி­யான பாம்பு அவ­ரது விரலில் கொத்­தி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து அப்பெண் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டார். சிகிச்­சைக்கு பின் இவர் வீடு திரும்­பி­விட்டார். ஆனால் உச்ச கோபத்­தி­லி­ருந்த பாம்பை கொன்­று­விட்­டனர்.

ஷெஜிஊ எனப்­படும் பாம்பு வைன் என்ற பாரம்­பரி வைத்­தியம் உடல் நலத்­திற்கு நன்மை பயக்கும் என சீனாவில் நம்­பப்­ப­டு­கி­றது. இதற்­கா­கவே அப்பெண் பாம்­பினை வைனில் அடைத்­துள்ளார். “ஷெஜிஊ என்னில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.
அதற்கு முன் பாம்பு என்னை தீண்டி வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­விட்­டது” என பாம்பு தீண்டிய பெண் கூறி­யுள்ளார். நீண்ட நாட்­க­ளுக்கு குளிரில் பாம்பு வாழத்­தக்­கது. ஆனால் ஒட்­சிசன் கிடைக்­க­வேண்டும்.

எனவே போத்தல் சரி­யாக மூடப்படாமல் இருந்திருக்கலாம். அதுவே பாம்பு உயிருடன் இருக்க காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply